Homeசெய்திகள்சினிமாதாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய புதுமண நட்சத்திர தம்பதி

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய புதுமண நட்சத்திர தம்பதி

-

- Advertisement -
அண்மையில் திருமணம் செய்து கொண்ட புதுமண நட்சத்திர தம்பதி அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் தாய்லாந்தில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றனர்.

90களில் கோலிவுட்டில் கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவரும், அவரது தந்தை அருண் பாண்டியனும் சேர்ந்து நடித்திருந்தனர். இதனிடையே, பிரபல நடிகர் அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளாக காதலித்து வந்த அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்தார். அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கினார். இதனிடையே அசோக் செல்வன் நடிப்பிலும் சபாநாயகன் என்ற திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படமும் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் காதலர் தினத்தையும் தொடர்ந்து வரும் கீர்த்தியின் பிறந்தநாளையும் கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ