Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் - ஜி.கே.வாசன்

ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்

-

- Advertisement -

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். இந்த நிலையில், தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து இந்தாண்டும் பாதியிலேயே வெளியேறினார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து கிளம்பினார். இதனிடையே சட்டப்பேரவையில் தான் உரையாற்றியது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது x வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான விரும்பத்தாக நிகழ்வுகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ