தான் இறந்து விட்டதாக போலியான செய்தி பரப்பியதற்காக, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டு, மேலும், 100 கோடி ரூபாய் அபதாதம் கேட்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் மாடல் அழகியும் கூட. இவர் கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என தெரிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி பிரபலமும் அடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சர்ச்சை கருத்தைகளும், செயல்களையும் செய்து வந்தார். பாலிவுட்டில் நஷா என்ற படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, அவர் தனக்கென தனியாக இணையதளம் தொடங்கினார். இதில், அவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர், கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக, அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஆனால், அடுத்த நாளே தான் இறக்கவில்லை என்றும், அது புற்றுநோய்க்கான விழிப்புணர்வு வீடியோ என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் எழுப்பினர். நோக்கம் சரியாக இருந்தாலும், இவ்வாறு இறந்து போய்விட்டேன் என நாடகம் போடுவது சரியில்லை என கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு பதிந்து 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்குமாறு கான்பூரில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே, அவர் மீது கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.