Homeசெய்திகள்சினிமாபூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் 'SK23' ஷூட்டிங்!

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ ஷூட்டிங்!

-

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் 'SK23' ஷூட்டிங்!நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடை உள்ளது.

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் 'SK23' ஷூட்டிங்!இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், துப்பாக்கி, கத்தி, ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. அதன்படி தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் 'SK23' ஷூட்டிங்!இந்த படத்தில் நடிகை ருக்மணி வசந்த் , வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. மேலும் நடிகர் மோகன்லாலும் இதில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்களைப் போல முழு நீள ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ