கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து, சொகுசு கார் ஒன்றை பிரபல நடிகை வாங்கியிருக்கிறார்.
மலையாள திரையுலகில் ோன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் விஷால் உடன் சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த குசேலன், மதாவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின் தடையற தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை மம்தா மோகன்தாஸ் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
வெண்புள்ளிகளால் அவதிப்பட்டு வந்த அவர் பல மாதங்களுக்கு சிகிச்சை எடுத்த பின் பூரண குணமடைந்து திரும்பினார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகும் மகாராஜா என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமன்றி அவர் சிறந்த பாடகியும் ஆவார். தமிழில் வில்லு படத்தில் டாடி மம்மி என்ற பாடலை பாடியிருப்பார். கோவா படத்திலும் ஒரு பாடல் பாடியிருப்பார்.
இந்நிலையில், நடிகை மம்தா மோகன்தாஸ் பல கோடி ரூபாயை செலவு செய்து சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ இசட்4 ஸ்போர்ட்ஸ் காரின் விலை ஒரு கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.