இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கிங்ஸ்டன், கள்வன், இடி முழக்கம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல் திரைப்படம் 2024 மார்ச் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஜி வி பிரகாஷ், டியர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ரோகிணி, காளி வெங்கட், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். நட்மெக் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷே இதற்கு இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Singles, couples, family men, one side lovers, soup boys, ellarum assemble! #DeAr‘s first single, #Thalavali is on its way! Get ready for a fun treat 🕺🏻https://t.co/qUKp2c3Ue8@NutmegProd @tvaroon #AbhishekRamisetty #PruthvirajGK @mynameisraahul #RomeoPictures @gvprakash pic.twitter.com/6VpskEwt4X
— Nutmeg Productions (@NutmegProd) February 14, 2024
இந்நிலையில் இந்த படத்தின் தலவலி எனும் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கலகலப்பான ப்ரோமோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். விண்ணுலக கவி இதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.