திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அரசின் விலையில்லா மிதிவண்டிள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினறுமான நாசர் கலந்துகொண்டார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வார்டு 7 பகுதியில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 565 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக கழக செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நாசர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் மற்றும் நகர கழக செயலாளர் பேபி சேகர், ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயப்பிரியா சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.