டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. விலைக்கு வாங்குவதாக புகார் எழுந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தனது அரசைக் கலைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. பிப்.19- ல் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் தனது ஆட்சியைக் கலைக்க சதி என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வந்தார். டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 8 இடங்களும் உள்ளன.
போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை என்பதை நிரூபிக்கவே இன்று (பிப்.17) சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.