நடிகர் வைபவ், மேயாத மான், கப்பல், லாக்கப், மலேசியா டு அம்னீஷியா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வைபவின் ஆலம்பனா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் வைபவ் ஷெரீஃப் இயக்கத்தில் ரணம்- அறம் தவறேல்
திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வைபவ் உடன் இணைந்து தான்யா ஹோப், நந்திதா, சக்கரவர்த்தி, சரஸ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மிதுன் மித்ரா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் அடுத்த அடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
Wishing my dear brother @actor_vaibhav all success for his 25th movie #RanamAramThavarel! May you reach many more milestones soon! God bless! 😇https://t.co/j7Zryyd8W1#Vaibhav25 @MMProduction22 @SheriefDirector @prosathish
— Silambarasan TR (@SilambarasanTR_) February 16, 2024
கிரைம் திரில்லரில் வெளியாகி உள்ள ரணம் படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரணம் படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.