நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடைய உள்ளன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK23 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதன்படி SK23 படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. அதேசமயம் கேக் மட்டுமில்லாமல் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்தும் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் பிரியாணி பரிமாறும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.