தமிழ்நாடு அரசின் சார்பில், சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 165- வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!
அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165- வது பிறந்தநாள் இன்று!
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.