Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாகற்காயில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்!

பாகற்காயில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட மறுக்கும் ஒரு காய்கறி பாகற்காய் தான். ஏனென்றால் பாகற்காயில் உள்ள கசப்புத் தன்மையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் பாகற்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை தருவது மட்டுமல்லாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.பாகற்காயில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்!

பாகற்காயில் பல வகைகள் இருக்கின்றன. அதில் இரண்டு வகையான பாகற்காய்களை உற்பத்தி செய்கின்றனர். ஒன்று குட்டையான பாகற்காய் மற்றொன்று நீளமான பாகற்காய். பாகற்காய்க்கு பாகல் ,பாவக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு.

நாம் உண்ண மறுக்கும் பாகற்காயில் இரண்டு மடங்கு கால்சியம் சத்துக்கள் இருக்கிறது. இது நம் எலும்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேசமயம் இரண்டு மடங்கு பொட்டாசியம் சத்துக்களும் இருக்கிறது. இது இதயத்தின் நலனை பாதுகாக்கவும் நரம்பு மண்டல செயல்பாட்டுக்கு உதவியாகவும்இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பாகற்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.

பாகற்காய் சாறு நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் கணையத்தில் உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிக்கவும் பயன்படுகிறது.பாகற்காயில் உள்ள நன்மைகள் பற்றி அறிவோம்!

பாகற்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவியாகவும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பாலூட்டும் தாய்மார்கள் இந்த பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இருப்பினும் ஏதேனும் நோய்களுக்காக பாகற்காயினை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ