தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்களில் கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். ‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’-ல் வெளியான அறிவிப்புகளில், மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆவடி தொகுதி மக்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைந்துள்ளது. இதுகுறித்து பட்ஜெட் தாக்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு ரூபாய் 12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட போவதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்..
இந்த அறிவிப்பானது ஆவடி தொகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொதுமக்களிடையே வரவேற்பு உள்ள திட்டமாகவும் அமைந்துள்ளது, 50 ஆண்டு காலமாக சென்னை மேற்கு பகுதிகள் போக்குவரத்து மேம்படுத்தலில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு அறிவித்த மெட்ரோ ரயில் திட்டமானது ஆவடி தொகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும், வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிர்க்கப்படும்,பல்வேறு சிரமங்களில் இருந்து பொதுமக்கள் வாழ்க்கை தரம் மேம்படும் விதமாக இந்த கோயம்பேடு ஆவடி மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு அமைந்துள்ளது, இதனால் வரும் காலங்களில் வளரும் சந்ததியினர் பெரும் பயன் பெறுவர் இந்த திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த சமூக ஆர்வலர்கள்.