Homeசெய்திகள்சினிமா'GOAT படம் பயங்கரமாக உருவாகி வருகிறது'..... அப்டேட் கொடுத்த நடிகர் வைபவ்!

‘GOAT படம் பயங்கரமாக உருவாகி வருகிறது’….. அப்டேட் கொடுத்த நடிகர் வைபவ்!

-

'GOAT படம் பயங்கரமாக உருவாகி வருகிறது'..... அப்டேட் கொடுத்த நடிகர் வைபவ்!விஜய் நடிப்பில் தற்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களை பட குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு கவனம் பெற்றனர். அதேசமயம் நடிகர் விஜய் படத்தில் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை போல் வில்லனாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தில் மெயின் வில்லனாக மைக் மோகன் தான் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.'GOAT படம் பயங்கரமாக உருவாகி வருகிறது'..... அப்டேட் கொடுத்த நடிகர் வைபவ்! இந்நிலையில் GOAT படத்தில் நடிக்கும் வைபவ், ரணம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, GOAT படம் என்ன கதை என்பதே தனக்கு தெரியாது எனவும் . ஆனால் படம் பயங்கரமாக உருவாகி வருகிறது எனவும் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் அழுத்தியுள்ளது.

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ரணம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ