Homeசெய்திகள்சினிமாகலெக்டராக நடிக்கும் ராம்சரண்?..... 'கேம் சேஞ்சர்' அப்டேட்!

கலெக்டராக நடிக்கும் ராம்சரண்?….. ‘கேம் சேஞ்சர்’ அப்டேட்!

-

கலெக்டராக நடிக்கும் ராம்சரண்?..... 'கேம் சேஞ்சர்' அப்டேட்!நடிகர் ராம்சரண், ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். படத்தில் ராம் சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. கொரோனா போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தை 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. கலெக்டராக நடிக்கும் ராம்சரண்?..... 'கேம் சேஞ்சர்' அப்டேட்!இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரணின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ராம்சரண் தேர்தல் அதிகாரியாக நடித்து வருவதாகவும், தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரும் கதை தான் இது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராம்சரண் இந்த படத்தில் கலெக்டராக நடிக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படத்தில் ராம்சரண் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ