Homeசெய்திகள்சினிமாமகனை இயக்கும் முத்தையா... படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..

மகனை இயக்கும் முத்தையா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..

-

பிரபல இயக்குநர் முத்தையா, அவரது மகன் விஜய் முத்தையாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.

தமிழில் கமர்ஷியல், காதல் என பல படங்கள் கலக்கலாக வந்தாலும், கிராமத்து பின்னணியில் திரைப்படங்களை உருவாக்கி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் முத்தையா. மண் மனம் மாறாமல் படம் இயக்கும் இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். குட்டிப்புலி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முத்தையா, அடுத்து, கார்த்தியை வைத்து கொம்பன், விஷாலை வைத்து மருது, சசிகுமாரை வைத்து கொடி வீரன், விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

முத்தையா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விருமன். இப்படத்தில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா தமிழில் நாயகனாக அறிமுக உள்ளார். இவர் அறிமுகமாகும் படத்தை தந்தையும், இயக்குநருமான முத்தையாவே இயக்க உளஅளார். இதற்கான பட பூஜை விழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

பல புதுமுக நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன், அதிரடியாக படத்தின் கதை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

MUST READ