Homeசெய்திகள்இந்தியாபுழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரி 20% விதிப்பு நீட்டிப்பு!

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரி 20% விதிப்பு நீட்டிப்பு!

-

 

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரி 20% விதிப்பு நீட்டிப்பு!
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான 20% வரி விதித்துள்ளதை வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகனை இயக்கும் முத்தையா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..

உள்நாட்டில் அரிசி தேவையைப் பூர்த்திச் செய்யும் நோக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்தது. இந்த நிலையில், இந்த வரி விதிப்பிற்கு முடிவு தேதி அறிவிக்காமல் வரும் மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உள்நாட்டில் அரிசி தேவையைப் பூர்த்திச் செய்யவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பச்சரிசி, நொய், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சர்வதேச அளவிலான அரிசி தேவையில் இந்தியாவின் பங்களிப்பு 40% ஆக இருக்கும் நிலையில், ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் பல நாடுகளில் உணவுப்பாற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவியது.

போர் படத்திலிருந்து புதிய பாடல்… நாளை ரிலீஸ்…

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அரிசி விலை கணிசமாக உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

MUST READ