Homeசெய்திகள்இந்தியா"அடுத்து வரும் மாதங்களில் அரிசி விலை குறையும்"- மத்திய அரசு!

“அடுத்து வரும் மாதங்களில் அரிசி விலை குறையும்”- மத்திய அரசு!

-

- Advertisement -

 

"அடுத்து வரும் மாதங்களில் அரிசி விலை குறையும்"- மத்திய அரசு!
அரிசி விலை அடுத்து வரும் மாதங்களில் குறையும் என எதிர்பார்ப்பதாக மத்திய உணவுத்துறைச் செயலாளர் சந்தீப் ஜோப்ரா தெரிவித்துள்ளார்.

சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ‘பாரத்’ என்ற பெயரில் மலிவு விலையில் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறைச் செயலாளர் சந்தீப் ஜோப்ரா, பாரத் கோதுமை மாவு விற்பனைக்கு பிறகு, சந்தைகளில் அதன் விலை நிலைத்தன்மை அடைந்துள்ளதாகவும், அரிசியின் விலையும் இதேபோல் நிலைத்தன்மை அடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தேவை இருக்கும் பட்சத்தில் பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனையை மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 3.5 லட்சம் கோதுமை மாவும், 20,000 டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘SK23’….. பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா?

அரிசியின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 15% அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பாரத் அரிசி விற்பனையாலும், அறுவடைக்கு பிறகு சந்தைகளுக்கு அரிசி வரத்து அதிகரிக்கும் என்பதாலும் அரிசியின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ