- Advertisement -
கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் முதல் படத்திலேயே உச்சம் தொட்டவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க அவர்முனைப்பு காட்டி வருகிறார். அதே சமயம் தமிழிலும் பல திரைப்படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சினிமா, குடும்பம், தொழில் என மாறி மாறி சூப்பர் ஸ்டாராக அனைத்து துறைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான படம் அன்னபூரணி. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் டெஸ்ட். இப்படத்தில் நயனுடன் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்ளில் நடிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பாக வௌியானாலும், அண்மையில் தான் படத்திற்கு டெஸ்ட் என தலைப்பு வைத்து முதல் தோற்றத்தை பகிர்ந்தனர். இதில் நடிகை மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார்.
A Glimpse of Dadasaheb Phalke Awards 2024🏆 #Jawan pic.twitter.com/KfNPePiGu3
— Nayanthara✨ (@NayantharaU) February 22, 2024