Homeசெய்திகள்சினிமாஊர்வசி நடிப்பில் ஜெ பேபி... படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்....

ஊர்வசி நடிப்பில் ஜெ பேபி… படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்….

-

- Advertisement -
kadalkanni
ஊர்வசி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெ பேபி திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஊர்வசிக்கு அடுத்தடுத்து ஏறுமுகம் தான். அவரது முகபாவனைகளுக்கும், சிரிப்புக்கும், நகைச்சுவையான உடல்மொழிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கமல், ரஜினி, பாக்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து ஊர்வசி நடித்திருக்கிறார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் ஊர்வசி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அவரது நடிப்பில் அப்பத்தா திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இது ஊர்வசி நடித்த 700-வது படமாகும். ற்போது ஊர்வதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ஜெ.பேபி. பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்து உள்ளார். சுரேஷ் மாரி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஊர்வசி, மாறன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 8-ம தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜெ பேபி படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ