Homeசெய்திகள்சினிமா10 ஆண்டுகளாகியும் சினிமா பற்றி புரிதல் இல்லை - ஆனந்தி

10 ஆண்டுகளாகியும் சினிமா பற்றி புரிதல் இல்லை – ஆனந்தி

-

- Advertisement -
திரை உலகில் அறிமுகமாகவும் பெரும்பாலான நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன், கயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கயல் ஆனந்தி இணைந்துள்ளார்.

கயல் ஆனந்தி சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். குறிப்பாக மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் கயல் ஆனந்திக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது மீண்டும் அடுத்தடுத்து நடித்து வரும் ஆனந்தி, ஒயிட் ரோஸ், மங்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். குபேந்திரன் காமாட்சி என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஆனந்தியுடன் ஆதித்யா கதிர், கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் படம் குறித்து பேசிய நடிகை கயல் ஆனந்தி, சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆயினும், எனக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது. தற்போது தான் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

MUST READ