Homeசெய்திகள்தமிழ்நாடு"விஷமத்தனமாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்"- தமிழக வெற்றிக் கழகம்!

“விஷமத்தனமாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்”- தமிழக வெற்றிக் கழகம்!

-

- Advertisement -

 

விரைவில் கட்சி தொடங்கும் விஜய்..... போட்டியாக களமிறங்குகிறாரா அஜித்?

யூகத்தின் அடிப்படையில், விஷமத்தனமாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2- ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19- ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

பிப்.26- ல் தொடங்குகிறது ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை!

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ