Homeசெய்திகள்இந்தியாஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்...தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!

-

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யான் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தின் இருபெரும் மாநில கட்சிகளான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருகட்சிகளிடையே போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யான் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 94 தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சிக்கு 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி தொகுதிகள் பாஜகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யான் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.

MUST READ