Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!

பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!

-

 

பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!

காங்கிரஸ் கட்சியில் விலகிய விஜயதரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்.

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!

டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி, தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தும், உறுப்பினர் அட்டையை வழங்கியும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார் விஜயதரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி.

“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!

இதனிடையே, விஜயதரணியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், விஜயதரணி மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

MUST READ