Homeசெய்திகள்சினிமாதினமும் ரகளை செய்யும் 'ராயன்' டீம்..... புதிய போஸ்டர் வெளியீடு!

தினமும் ரகளை செய்யும் ‘ராயன்’ டீம்….. புதிய போஸ்டர் வெளியீடு!

-

நடிகர் தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ராயன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தினமும் ரகளை செய்யும் 'ராயன்' டீம்..... புதிய போஸ்டர் வெளியீடு!இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் மாஸான கேங்ஸ்டர் படமாக தயாராகியுள்ளது. படத்தினை கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்க்கின்றனர். அதன்படி ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்களின் போஸ்டர்களை படக்குழுவினர் தினமும் வெளியிட்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை துஷாரா விஜயன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் அபர்ணா பால, முரளி நித்யா மேனன், அனிகா சுரேந்திரன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவர்களின் போஸ்டர்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ