- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் வருண். இவர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் உறவினர் ஆவார். மேலும், இவர் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். தலைவா, ஒரு நாள் இரவில், போகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், இதைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் இவர் வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் வருணின் கதாபாத்திரம்பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நெருப்புடா, சம் டைம்ஸ், எல்.கே.ஜி., கோமாளி ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பப்பி திரைப்படத்தில் நாயகனாக திரைக்கு வந்தார் வருண். இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சீறு, குட்டி ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார்.
ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பல ஆண்டுகளாக இத்திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டே முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத பல காரணங்களால் இப்படத்தின் வௌியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.
Varun’s Transformation for #Joshua 🤝
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 25, 2024