Homeசெய்திகள்சினிமாரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் 'கில்லி'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் ‘கில்லி’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கில்லி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்த நிலையில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் 'கில்லி'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்படி திரைப்படம் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் சலிக்காமல் பார்த்து ரசிப்பதற்கு தனி கூட்டமே இருக்கிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடிய படம் தான் கில்லி. இந்நிலையில் இப்படம் 2024 ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி, 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கில்லி படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ரிலீசான அதே நாளில் ஏப்ரல் 17ஆம் தேதி இந்தப் படம் 4கே டிஜிட்டல் தரத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் 'கில்லி'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஏற்கனவே தனுஷின் 3, கமலின் வேட்டையாடு விளையாடு, சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. அதுபோல கில்லி திரைப்படமும் வசூலை வாரிக் குவிக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ