தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை புதன்கிழமையில் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வெற்றிப்பாதையில் லால் சலாம்… அடுத்து சித்தார்த்தை இறக்க முடிவு…
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை புதன்கிழமையில் நடத்த வேண்டும். வார இறுதி நாட்களிலோ அல்லது வாரத்தின் தொடக்க நாட்களிலோ வைக்க வேண்டாம். இன்னும் சில மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்கிறது. தமிழகத்தில் ஜூன் வரை அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக்கள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது.
கண்ணமே என் கண்ணால… டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்…
விஜயதரணி ராஜினாமா செய்தது குறித்த எந்த ஆவணமும் வரவில்லை. சட்டப்பேரவைச் செயலாளரிடம் இருந்து எந்த ஆவணமும் வரவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவப் படை தமிழகம் வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் 40 கம்பெனி துணை ராணுவம் முதற்கட்டமாக தமிழகம் வரவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.