தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு முள்ளங்கியை வாங்கிச் செல்கின்றனர்.
கண்ணமே என் கண்ணால… டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்…
முள்ளங்கி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானால் மட்டுமே கணிசமான வருவாய் கிடைக்கும் என்றும், தற்போது முள்ளங்கி கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாவதால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வெற்றிப்பாதையில் லால் சலாம்… அடுத்து சித்தார்த்தை இறக்க முடிவு…
தருமபுரி மாவட்டத்தில் மட்டுமே சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முள்ளங்கி சாகுபடி அதிகரித்ததால், அதன் விலை குறைவுக்கு காரணம் என்று கூறுகின்றனர் வியாபாரிகள். அத்துடன், வரும் நாட்களில் முள்ளங்கியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.