பிரபல எழுத்தாளர் ஜெயமோகனனிம் மகனின் திருமண விழாவில், திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
தமிழகத்தின் முக்கிய மற்றும் பிரபலமான எழுத்தாளர் ஜெயமோகன். இவரது புத்தகங்கள் பலரின் விருப்ப புத்தகங்கள் ஆகும். சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வாசகர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இவர் புத்தகங்களுக்கு மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கும் வசனங்கள் எழுதி இருக்கிறார். நான் கடவுள் படத்தில் தொடங்கி கடல், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, 6 மெழுகுவர்த்திகள், காவியத் தலைவன், சர்கார், பாபநாசம், வெந்து தணிந்தது காடு என பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார்.
அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கும் அவர் வசனம் எழுதி உள்ளார். மேலும், வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்திற்கும் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார். மணிரத்னம், வெற்றிமாறன், ஷங்கர், பாலா, கௌதம் மேனன், வசந்த், முருகதாஸ், சீனு ராமசாமி உள்பட பல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார். தமிழ் மட்டுமன்றி, மலையாளப் படங்களுக்கும் இவர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அஜிதன் என்ற மகன் உள்ளார். அஜிதனுக்கும், கோவையச் சேர்ந்த தன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. கோவையில் திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து சென்னையில் சொகுசு விடுதியில் இருவரின் வரவேற்பு விருந்தும் நடைபெற்றது. இதில், நடிகர்கள், இயக்குநர்கள் என திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.