Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம்..... இயக்குனர் இவர்தானா?

தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம்….. இயக்குனர் இவர்தானா?

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம்..... இயக்குனர் இவர்தானா?மேலும் படத்தை பால்கி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். எனவே அடுத்தபடியாக இளையராஜா, இந்த படத்தை தானே தயாரித்து இயக்குனரையும் தானே தேர்ந்தெடுக்க போவதாக முடிவு செய்திருந்தார். இதன் காரணமாக நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகிய இருவரையும் இளையராஜாவிடம் அனுப்பி வைத்துள்ளார். இந்த இரு இயக்குனர்களில் இளையராஜா , இயக்குனர் அருண் மாதேஸ்வரனை தேர்ந்தெடுத்துள்ளாராம். அது மட்டும் இல்லாமல் இரண்டு மாதங்கள் அருண் மாதேஸ்வரனை தன்னுடன் பயணித்து ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக பழைய நினைவுகளை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாராம். எனவே அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் பயணிக்க தொடங்கி விட்டாராம். அடுத்தபடியாக படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம்..... இயக்குனர் இவர்தானா?

ராக்கி சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அடுத்ததாக இவர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தையும் எடுத்திருந்தார். படத்தின் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் தான் சொல்ல வந்த கதையை வித்தியாசமாக திரையில் காட்டுவது இவருடைய ஸ்டைல். வழக்கமாகவே இவருடைய படங்களில் ரத்தம் தெறிக்கும் படியான வன்முறை காட்சிகள் சற்று தூக்கலாகவே இருக்கும். எனவே இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் , அவருடைய வழக்கமான ஸ்டைலில் எடுத்து விடக்கூடாது என்று பலரும் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.

MUST READ