நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராகவும் ஹீரோவாகவும் வலம் வந்தவர். ஆனால் சமீப காலமாக வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார். அந்த வகையில் ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பி இருந்தார். அதே சமயம் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே இந்தியா 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக சியான் 62 படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல் ஐ சி படத்திலும் நடிக்கிறார்.
இதற்கிடையில், நடிகர் கவின் நடிக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்திருந்தது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்க உள்ளதாகவும், நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், கவினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிக்கவில்லையாம். எஸ் ஜே சூர்யா தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.