வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. அதைத்தொடர்ந்து சரோஜா, கலகலப்பு, தமிழ்படம், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2, சுமோ போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் மிர்ச்சி சிவா, சலூன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யோகி பாபுவின், தர்ம பிரபு பட இயக்குனர் முத்துக்குமரன் எழுதி இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022 ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது. அதேசமயம் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி மயிர் எனும் பாடல் நாளை (பிப்ரவரி 28) இல் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
நடிகர் யோகி பாபு தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோவாகவும் காமெடியனாகவும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.