Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

-

- Advertisement -

 

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

இரண்டு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், ஜோலார்பேட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரிபெல்… உண்மைச் சம்பவத்தை தழுவி கதை…

ராணிப்பேட்டை மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அம்மூர் வேலம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அறிவழகன்- வெண்ணிலா. அறிவழகன் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அறிவழகன், வெண்ணிலாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்.27) காலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை செய்துக் கொள்ளும் நோக்கத்தில், தனது 7 வயது மகள் தார்நிகா மற்றும் 5 வயது மகள் தனுஸ்ரீ ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு அம்மூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டும் சாய் பல்லவி

சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ரயில் முன்பு தனது இரு குழந்தைகளுடன் வெண்ணிலா பாய்ந்துள்ளார். இதில் மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வெண்ணிலாவின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ