தனுஷ் கடந்த 2017-ல் வெளியான ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. அதே சமயம் படக்குழுவினர் தினமும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர். எதனால் இப்படி ஒவ்வொரு போஸ்டர்களை தினமும் வெளியிட்டு வருகிறார்கள்.
அத்தனை பேரும் அவ்வளவு முக்கியமானவர்களா? என்றும் சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வந்தனர். இந்நிலையில் இது சம்பந்தமான விடை கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் தனுஷ் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிக ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இதன் காரணமாக தான் படக்குழுவினர் தினமும் ஒரு போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் நடிகை துஷாரா விஜயனின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தனுஷ், ராயன் படத்தில் என்ன கன்டென்ட்டை வைத்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -