Homeசெய்திகள்இந்தியாஇமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

-

 

இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமாவால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர் காட்சி மாறி வாக்களித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாநில அமைச்சர் விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, இமாச்சலப்பிரதேசத்தின் சட்டப்பேரவையின் சபாநாயகர் அலுவலகத்தில் முழக்கம் எழுப்பி தவறாக நடந்துக் கொண்ட புகாரில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயராம் தாக்கூர், விபின் சிங் பார்மர், ரன்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜ் பவனுக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து முறையீட்டுள்ளனர். இந்த சூழலில், முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!

மொத்தம் 68 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கு காங்கிரஸுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உள்ளனர்.

இமாச்சலில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

MUST READ