Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகை!

ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகை!

-

- Advertisement -

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகை! இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருந்த இத்திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் விநாயகன் வில்லனாக நடித்து மிரட்டினார்.  மேலும் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகை!ரஜினிக்கு மகனாக நடித்திருந்த வசந்த் ரவியும் தனது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தினார். அதே சமயம் வசந்த் ரவிக்கு மனைவியாக, அதாவது ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்த மிர்னா மேனன், ஜெயிலர் படத்திற்கு பிறகு ஃபேமஸ் ஆகிவிட்டார். தற்போதைய தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் ரஜினிக்கு மருமகளாக நடிக்க இருந்தாராம். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த வாய்ப்பை இழந்து விட்டாராம் சைத்ரா ரெட்டி. ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகை!இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டாரே சைத்ரா ரெட்டி என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சைத்ரா ரெட்டி. இவர் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்த க்கது.

MUST READ