Homeசெய்திகள்இந்தியாநடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

-

 

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா அருகே உள்ள கலாஜ்ஹரியா (Kalajharia) ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள் நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கியதாகவும், தற்போது அந்த வழித்தடத்தில் வந்த மற்றொரு ரயில் பயணிகள் மீது மோதியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாகப் பரவிய தகவலைத் தொடர்ந்து அச்சமடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி தண்டவாளத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் 10- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படும் சூழலில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

8 நாட்கள் தான் நடிக்க சென்றேன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது….. ‘விடுதலை 2’ குறித்து விஜய் சேதுபதி!

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ