Homeசெய்திகள்தமிழ்நாடுசிவில் நீதிபதி பதவிகளுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து!

சிவில் நீதிபதி பதவிகளுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து!

-

- Advertisement -

 

தமிழகத்தில் காலியாக 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிகத் தேர்வு பட்டியலை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…

சிவில் நீதிபதி பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் அதிக மதிப்பெண்களை பெற்ற விண்ணப்பத்தாரர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து ஷீனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களை பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், தற்காலிக தேர்வு பட்டியலை ரத்துச் செய்தனர்.

புஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பத்தாரர்களை பொதுப்பிரிவில் சேர்த்து மீதமுள்ள விண்ணப்பத்தாரர்களை இடஒதுக்கீட்டின் முறையைப் பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிகத் தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ