தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!
வரும் மார்ச் 22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள +2 பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 7.22 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 3,58,201 மாணவர்களும், 4,13,998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,72,200 பேர் தேர்வெழுதுகின்றனர்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுக்கு 3,300- க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொதுத்தேர்வுகளின் போது, 43,200 தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 14,688 மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். +2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.