Homeசெய்திகள்சினிமாதலை வணங்குகிறேன்.... தமிழ் திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ்... தலை வணங்குகிறேன்…. தமிழ் திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ்…
- Advertisement -
மலையாளத்தில் வௌியாகி திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை, தமிழ் நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மலையாளத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுமே ஒரு கலக்கு கலக்கி வருகின்றன. பிரம்மயுகம் படத்தில் தொடங்கி பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் மிகவும் சிறப்பு, இத்திரைப்படங்கள் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பாராட்டுகளை பெற்று வருகின்றன. இறுதியாக வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை பாராட்டாத பிரபலங்கள் இல்லை என்றே சொல்லலாம்.
இதுவரை இல்லாத வகையில் இத்திரைப்படம் வசூலை குவித்து வருகிறது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள், ஒருவருக்காக நண்பர்கள் இறங்கிச் செல்லும் நிகழ்வுகள், இது தான் இத்திரைப்படத்தின் அடித்தளக்கதை.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். அடுத்ததாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை பாராட்டினார். இந்நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், மஞ்சும்மல் பாய்ஸ் சிறந்த ,அருமையான மற்றும் அற்புதமான திரைப்படமம். திரைப்படைப்பின் உச்சம். தலை வணங்குகிறேன். தயவு செய்து இத்திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், தவறவிட்டுவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இவர் மட்டுமன்றி விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோரும் படத்தின் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி இருக்கின்றனர்.