Homeசெய்திகள்இந்தியாஇளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

-

- Advertisement -

பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கடந்த மாதம் 20ம் தேதி இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? இவரை கொலை செய்தவர் யார் ? என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், முபாரக் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை அழைத்துச் சென்றது தெரியவந்தது. கடந்த 19ம் தேதி சிட்டி மார்க்கெட்டில் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை சவாரிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது திடீரென பாழடைந்த வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அவரை கற்பழித்துள்ளார். பின்னர் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் முபாரக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ