வாழைத்தண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு- 200 கிராம்
தேங்காய் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
தயிர் – 100 மில்லி.லி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாழைத்தண்டு சட்னி செய்ய முதலில் வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பு : அதில் உள்ள நாரை எடுத்து விட வேண்டும்.
பின் அந்த வாழைத்தண்டை வேக வைக்க வேண்டும்.
அதே சமயம் தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் ஆகிவற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதன் பின் அரைத்து வைத்துள்ள வாழைத்தண்டு கலவையை சேர்க்க வேண்டும்.
இப்போது வாழைத்தண்டு சட்னி தயார். இதனை விரைவாக தயார் செய்துவிடலாம். இந்த சட்னியை இட்லி, தோசை போன்றவைகளுக்கு சைடிஷாக பயன்படுத்தலாம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்தின் தேவைக்கு ஏற்ப இதனை சாப்பிடலாம்.