பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் வெளியான நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. இருப்பினும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காமல் போக, லவ் டுடே பட நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக ஈஷா மையத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக எல்ஐசி படக்குழு சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -