Homeசெய்திகள்சினிமாமஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரை வளைத்துப் போட்ட தமிழ் தயாரிப்பாளர்!

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரை வளைத்துப் போட்ட தமிழ் தயாரிப்பாளர்!

-

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே குணா பட “கண்மணி அன்போடு காதலன்” பாடல் வரிகள் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரை வளைத்துப் போட்ட தமிழ் தயாரிப்பாளர்!காரணம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இப்பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தான். படத்தில் இப்பாடல் இடம் பெறும் அந்தக் காட்சியில் ரசிகர்கள் மெய்மறந்து கண்ணீருடன் கைதட்டி ரசிப்பதையும் பார்க்க முடிந்தது. மிகவும் எமோஷனலாக இப்படம் ரசிகர்களை கவர்ந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கான மிகப் பெரிய காரணம். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்திற்கு இது இரண்டாவது படம். முதலாவதாக ஜான் இ மேன் என்ற படத்தை இயக்கி இருந்தார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி விட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே இப்படம் மாபெரும் வெற்றி அடையும் என கருதிய தமிழ் தயாரிப்பாளர் ஒருவர், இயக்குனர் சிதம்பரத்தை அணுகி அடுத்த படத்திற்காக அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துள்ளாராம். மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரை வளைத்துப் போட்ட தமிழ் தயாரிப்பாளர்!அந்த தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனவே இந்த செய்தி உறுதியானால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தமிழ் படமாக இருக்குமா அல்லது மலையாள படமா அல்லது இரு மொழிகளிலும் வெளியாகக் கூடிய படமாக இருக்குமா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் அது எந்த மாதிரியான படம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ