Homeசெய்திகள்சினிமாவிஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன இயக்குனர்......கோட் பட அப்டேட்!

விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன இயக்குனர்……கோட் பட அப்டேட்!

-

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் கோட் (the greatest of all time). ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன இயக்குனர்!பிரபுதேவா, பிரசாந்த் உட்பட பல தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மைக் மோகன் தான் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இவை எல்லாமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்துள்ளது. வழக்கமாகவே விஜய் படத்தில் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்திருக்கும். ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் படியான பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும். அப்பாடலுக்கு விஜய் ஆடும் நடனமும் வெகுவாக வைரலாகும். அந்த வகையில் கோட் படத்திலும் விஜயின் சிறப்பான நடனம் இடம்பெறும் பாடல் ஒன்று உள்ளதாம். இப்பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளாராம். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான குண்டூர் காரம் படத்தின் “மடத்தபெட்டி” என்ற பாடலுக்கு இவர் தான் நடன இயக்குனராக பணியாற்றினார். விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன இயக்குனர்!இப்பாடலில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரின் நடனம் வெகுவாக பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இந்த நடனம் ட்ரெண்டானது. இந்நிலையில் தான் விஜய், நடன இயக்குனர் சேகர் மாஸ்டர் கோட் படத்திற்காக களம் இறக்கி இருக்கிறாராம். பெரும்பாலும் இதுவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் படமாக உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ