நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவோ அல்லது வாக்களிப்பதற்காகவோ லஞ்சம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய ஒருமித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் கே நாராயணா பாராட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு,பி.வி. நரசிம்மராவ் -எதிர்- மத்திய புலனாய்வுத்துறை வழக்கில், 1998ல் வழங்கிய தீர்ப்பில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இன்று ஏழு நீதிபதிகளை கொண்ட அமர்வு, பழைய தீர்ப்பை ரத்து செய்து இருக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய வழக்கில் பழைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அந்த எம்பிக்கள் மீது வழக்குத் தொடர முடியாதென பாதுகாப்பளித்தது. ஆனால், தற்போதைய வரலாற்றுத் தீர்ப்பு, ஒரு வாக்கெடுப்புக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாட்டையே பாதிக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்த்திவாலா, சஞ்சய்குமார் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஏழு பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் நாராயணா கோரிக்கை விடுத்துள்ளார். நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் “தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற கோட்பாடு உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது விசாரணைகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், பல ஆண்டுகள் வாய்தா வாங்கிய நீட்டித்து விடுவார்கள்.

எனவே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்களை, எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அவர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டால், மார்ச் 4 ஆம் தேதி தீர்ப்பின் நோக்கம் தோற்கடிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவோ அல்லது வாக்களிப்பதற்காகவோ லஞ்சம் வாங்குவது அப்பட்டமான குற்றமாகும். இவ்வாறு லஞ்சம் பெறுபவர்கள், கொடுப்பவர்களை எந்த விசாரணையும் தண்டனையும் தப்பித்துக் கொள்ள அனுமதித்தால், அது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நமது அரசியல் சாசனத்தில் அடிப்படைகளையுமே தகர்த்து விடும் என்று டாக்டர் கே நாராயணா அறிக்கையில் தெரிவித்துள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.