ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளில் மற்றொரு நிதி நிறுவனமும் சிக்கியுள்ளது. அந்த நிறுவனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!
‘IIFL’ பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிறுவனம் இனிமேல் தங்க நகைக்கடன் வழங்க தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால், ஏற்கனவே வழங்கியிருந்த நகைக்கடனுக்கான தொகையை வசூல் செய்வது, நகைகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட வர்த்தகங்களைத் தொடர அனுமதித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ‘IIFL’ நிறுவனத்தின் நிதிநிலையை ஆய்வு செய்ததில் நகைக்கடன் வர்த்தகத்தில் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் – மக்கள் பீதி!
குறிப்பாக, அடமானம் வைக்க வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் நகைகளை மதிப்பாய்வு செய்வதில் விதிமீறல்கள் இருப்பதாகவும், கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் சட்ட வரம்புகளை மீறி வசூல் செய்வது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிலையான ஏல முறையைக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களின் நகைக்கடன் கணக்குகளுக்கான கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி, அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.