Homeசெய்திகள்சினிமாமஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்... படக்குழு உற்சாகம்...

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்… படக்குழு உற்சாகம்…

-

- Advertisement -
கடந்த இரண்டு வாரங்களில் மலையாளத்தில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகின்றன. இறுதியாக வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை பாராட்டாத பிரபலங்கள் இல்லை என்றே சொல்லலாம். இதுவரை இல்லாத வகையில் இத்திரைப்படம் வசூலை குவித்து வருகிறது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள், ஒருவருக்காக நண்பர்கள் இறங்கிச் செல்லும் நிகழ்வுகள், இது தான் இத்திரைப்படத்தின் அடித்தளக்கதை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். அடுத்ததாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை பாராட்டினார். இந்நிலையில், படத்தை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். படத்தை கண்டு ரசித்த அவர், படக்குழுவை செல்போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

மேலும், இயக்குநர் கௌதம் மேனனும் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை பாராட்டி உள்ளார். திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம், சினிமாவை ஒரு மாயாஜலத்தோடு இணைத்த படம், மிகச்சிறப்பாக படத்தை எடுத்துள்ளனர். மனிதர் உணர்ந்து கொள்ள பாடல் வந்தபோது, நான் முதல்முதலில் குணா படம் பார்த்தது தான் என் நினைவுக்கு வந்தது என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

MUST READ