வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், “இன்று மகளிர் தினத்தையொட்டி, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பால் நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும்.
கேஸ் சிலிண்டரை மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு, ஆரோக்கியமான சூழலை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் மேலும் சில அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.